Sunday, 14 April 2013

தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.752 சரிவு

சென்னை: கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.752 சரிந்துள்ளது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 21728 ஆக இருந்தது. இது இன்று 752 ரூபாய் சரிந்து 20976 ஆக உள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை நேற்று ரூ.2716ஆக இருந்தது, இன்று ரூ.2622ஆக குறைந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 29050 ல் இருந்து 1010 ரூபாய் குறைந்து ரூ.28040ஆக சரிந்துள்ளது. இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. பார் வெள்ளியின் விலை ரூ. 51790ல் இருந்து ரூ. 49565ஆக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) ரூ.55.40 ல் இருந்து ரூ.53.00 ஆக குறைந்துள்ளது.

Source:  http://www.dinamalar.com/news_detail.asp?id=689251

No comments:

Post a Comment